இந்தியாவுக்கு ஏன் நீல கடல் கடற்படை தேவை !!

  • Tamil Defense
  • May 7, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு ஏன் நீல கடல் கடற்படை தேவை !!

ஒய்வு பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரியான வைஸ் அட்மிரல் அனுப் சிங் (கிழக்கு பிராந்திய கடற்படை) முன்வைக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக கடற்கரை கொண்ட நாடுகள் பெரும் செல்வ செழிப்பான நாடுகளான இருநாதுள்ளதை நாம் காண முடியும் காரணம் கடற்கரையானது பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வழி காட்டும்.

கடல்சார் வர்த்தகம், மீன்வளம், கடல்சார் மற்றும் கடற்கரை தொழில்கள், கனிம வளங்கள் ஆகியவை ஒரு கடல்சார் நாட்டை பெரும் செல்வசெழிப்பு மிக்க நாடாக மாற்றமடைய உதவும்.

அந்த வகையில் சீனா ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளை சிறந்த உதாரணமாக காட்ட முடியும், இந்தியாவும் அத்தகைய நாடுகளில் ஒன்றாகும்.

மூன்று புறம் கடலுடன் உலகின் இரண்டாவது பெரிய தீபகற்ப பகுதியை கொண்ட நாடு என்பதை பல இந்தியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, தீபகற்ப கடற்கரை 5422 கிமீ நீளமும் தீவுகளின் கடற்கரையோரம் 2094 கிமீ என மொத்தமாக சுமார் 7516 கிமீ நீள கடற்கரையை கொண்டுள்ளது.

இந்த புவியியல் அமைப்பும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா அமைந்துள்ள இடமும் நம் நாட்டிற்கு பெரும் வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை காரணம் புவியியல் அறிஞர்கள் இந்தியா பல பெரிய துறைமுகங்கள் அமைத்து தனது வளத்தை பயன்படுத்தி கொள்ள உதவும் என கூறுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் பல பாதுகாப்பு சிக்கல்களும் நிலவுகின்றன இதில் முதலிடத்தை பிடிப்பவை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ஜலசந்திகள் ஆகும்.

கேப் ஆஃப் குட் ஹோப், மொசாம்பிக் கால்வாய், சூயஸ் கால்வாய், பாப் எல மன்டெப் ஜலசந்தி, ஹோர்மூஸ் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி, சுந்தா மற்றும் லம்போக் ஜலசந்திகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

இந்த பகுதிகள் வழியாக வர்த்தகம் மட்டுமின்றி போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்கள், மனித கடத்தல், பயங்கரவாத செயல்கள் ஆகியவையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்திய கடற்படை இந்த பகுதிகளில் தனது பலத்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாகிறது, இந்திய வர்த்தக நலன்கள் மட்டுமின்றி உலக வர்த்தக நலன்களையும் காப்பது அவசியம் ஆகும்.

இவை ஒரு புறம் இருக்க இந்தியாவின் எதிரி நாடுகளின் நடவடிக்கைகள் மற்றொரு பிரச்சினை ஆகும் குறிப்பாக சீன கடற்படை அடிக்கடி இந்திய பெருங்கடல் பகுதியில் இயங்குவதோடு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த பகுதியில் இயங்குவதற்கு காரணம் தகவல்களை சேகரிக்கவே ஆகும் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சீன தளங்களும் குறிப்பிடதக்கவை ஆகும்.

மேற்க்கண்ட இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தொடர்ச்சியாக இந்த பிராந்தியத்தில் இயங்கி வருகிறது இதற்காகவே “மிஷன் பேஸ்ட் டிபாளாய்மென்ட்ஸ்” எனும் நடவடிக்கையை இந்திய கடற்படை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நமது வளங்கள் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்;

1) சுமார் 24 நாடுகளில் 46 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நம்மில் நடத்தப்பட்டு வருகின்றன அவற்றில் 39 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கடலசார் நாடுகளில் உள்ளன, ஏதேனும் பிரச்சினை என்றால் நமது கடற்படை தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சுமார் 38 மில்லியன் இந்தியர்கள் கடல்சார் நாடுகளில் வாழ்கின்றனர், 1 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் கடல்சார் நாடுகளில் வாழ்கின்றனர், ஏதேனும் பிரச்சினை என்றால் இவர்களை கடல்மார்ககமாக மீட்க வேண்டும்.

1994ல் சோமாலியா, 2006ல் பெய்ரூட், 2011ல் லிபியா, 2015ல் ஏமன் மற்றும் தற்போது கொரோனா மீட்பு பணிகள் ஆகியவை இத்தகைய கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும்.

இதில் பெய்ரூட் சம்பவத்தின் போது இந்திய கடற்படையின் விரைவுப்படை அணி ஒன்று சூயல் கால்வாய் பகுதியில் இருந்தது அதனால் தான் உடனடியாக நம் மக்களை காப்பாற்ற முடிந்தது இல்லையெனில் சுமார் 3500 கடல்மைல்கள் பயணித்து மக்களை மீட்டு இருக்க முடியாது.

இந்திய கடற்படை நீலகாகடல் கடற்படையாக உருமாற்றம் பெற்றிருந்தால் நமது கடற்படை கிழக்கு மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் எவ்வித சிரமும் இன்றி இயங்க முடியும்

காரணம் நமது கடற்படை தளங்கள், பராமரிப்பு மையங்கள், சப்ளை கப்பல்கள் என நமது படையணி திறம்பட இந்த பிராந்தியம் முழுக்க வியாபித்து இருக்கும்.

இப்படி இந்திய கடற்படையும் தனது ஆதிக்கத்தை தனது எல்லைகளுக்கு அப்பால் நிலைநாட்டிக் கொள்ள முடியும் மேலும் தனது எல்லையில் அசைக்க முடியாத சக்தியாக நிலைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தான் அமெரிக்கா உலகம் முழுக்க தனது படைதளங்களில் இருந்து மிக குறுகிய காலத்தில் தனது கடற்படையை அனுப்பி போர்களை கூட நடத்தியதை நாம் பார்க்க முடியும்.