ஆஃப்கானிஸ்தான்: அமெரிக்க படைவிலக்க காலக்கெடு அதிகரிப்பு காரணம் என்ன ??

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மே மாதம் அனைத்து வெளிநாட்டு படைகளும் படைகளை விலக்கி கொள்வதாக ஒப்பு கொள்ளப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கடந்த மாதம் பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்ட பிறகு,

ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க படைகள் முற்றிலுமாக படை விலக்க நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

அமெரிக்கா இந்த படை விலக்க காலக்கெடுவை நீட்டிப்பு செய்தது தலிபான்களை எரிச்சலடைய செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் தாலிபான்கள் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்த கையோடு துருக்கியில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையையும் புறக்கணித்து உள்ளனர்.

ஆகவே ஆஃப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வல்லுனர்கள் தாலிபான்களின் மிரட்டல்களை வெறுமனே கடந்து சென்று விடக்கூடாது என எச்சரிகின்றனர்.