
சனிக்கிழமை காலை அரேபிய கடலில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படையணியை சேர்ந்த யு.எஸ்.எஸ். மான்டெரி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது எந்த நாட்டு பதிவெண்ணும் இல்லாத சிறிய கலன் ஒன்றை யு.எஸ்.எஸ். மான்டெரி இடைமறித்து சோதனை நடத்தியது.
அப்போது ஒரு டஜன் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன மற்றும் ரஷ்ய துப்பாக்கிகள் கைப்பற்ற பட்டன.
பின்னர் அந்த படகையும் அதில் இருந்தவர்களையும் விடுவித்ததாக அமெரிக்க கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.