Breaking News

காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் உயிரிழப்பு; என்ன நடக்கறது அங்கு ?

  • Tamil Defense
  • May 12, 2021
  • Comments Off on காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் உயிரிழப்பு; என்ன நடக்கறது அங்கு ?

கடந்த காலங்களிலேயே பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.நேற்றிரவு நடைபெற்ற மோதலில் காசாவில் 35 பேரும் ,இஸ்ரேலில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.

புதன் கிழமை காலை முதலே இஸ்ரேலிய விமானப்படை நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை காசா மீது நடத்தியுள்ளது.அதே போல ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பீர்செபா நகரங்களில் மீது ஏவியுள்ளது.

நிறைய ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர்களை வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.அதே போல ஹமாஸ் இடங்கள் மற்றும் அலுவலகங்களை தாக்கியுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

2014 போருக்கு பிறகு தற்போது இஸ்ரேல்-காசா பிரச்சனை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.தற்போது நடைபெற்று வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தாக்குதலை நிறுத்துமாறும் ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.