ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுவரை பலஸ்தீனியர்கள் தரப்பில் 100க்கும் அதிகமானோரும் இஸ்ரேலிய தரப்பில் 9 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேலிய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டதையடுத்து விரைவில் ஒரு மிகப்பெரிய படையெடுப்பை நடத்தி ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இஸ்ரேலிய பிரதமர் தொடங்கி ராணுவ அமைச்சர் ராணுவ தலைமை தளபதி என அனைவரும் இதனை உறுதிப்படுத்தும் தொனியிலேயே பேசினர், இது போக எல்லையில் வீரர்கள் டாங்கிகள் மற்றும் பிரங்கிள் குவிக்கப்பட்டன.
இதனை நம்பிய ஹமாஸ் அமைப்பானது தனது பயங்கரவாதிகளை காசா நகரத்தில் அமைந்துள்ள சுரங்க பாதைகளில் பதுங்கி தயாராக இருக்கும்படியும் இஸ்ரேலிய படைகள் உள்நுழைந்து வரும்போது தீடிர் தாக்குதல் நடத்தி கடும் சேதத்தை விளைவிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படியே ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் சுரங்கங்களில் பதுங்கி தயாராக இருந்தனர், இதனை எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேல் உடனடியாக செயலில் இறங்கியது.
இஸ்ரேலிய ராணுவமா மெட்ரோ என அழைக்கும் இந்த சுரங்கங்கள் மீது வான்படை தரைப்படை மற்றும் கடற்படை என முப்படைகளின் போர் விமானங்கள் பிரங்கிகள் மற்றும் தாக்குதல் படகுகள் மூலமாக பலத்த தாக்குதல் நடத்தியது சுமார் 1000 குண்டுகள் வீசப்பட்டன.
இதில் ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதிகள் பலர் கொல்லபட்ட நிலையில் உயிர் பிழைத்து வெளியே வந்த பயங்கரவாதிகளை இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள், டாங்கிகள் மூலம் தாக்கினர் ஆகவே பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பும் காசாவில் எத்தனை சுரங்கங்கள் அழிக்கப்பட்டன அல்லது எத்தனை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
பல உலக நாடுகள் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி வருகையில் இஸ்ரேல் அதனை நிராகரித்து உள்ளது, ஹமாஸ் கொடுக்க வேண்டிய விலையை கொடுக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது.