இஸ்ரேல் ஹமாஸ் சண்டை; ஐநா பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பு

  • Tamil Defense
  • May 15, 2021
  • Comments Off on இஸ்ரேல் ஹமாஸ் சண்டை; ஐநா பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பு

தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இடையே மிக தீவிரமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் வருகிற மே16 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூடி பேச உள்ளதாக ஐ.நாவுக்கான சீற நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சீன நிரந்தர தூதர் ஜாங் ஜுன் வருகிற மே16 காலை 10 மணியளவில் இந்த சந்திப்பு துவங்கும் எனவும் மேலும் சீனாவுக்கு இந்த மோதல் மிகுந்த கவலையளிக்கிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் சமீபத்தில் சீனா நார்வே மற்றும் டுனிசீயா ஆகிய நாடுகள் முன்மொழிந்த சந்திப்பை அமெரிக்கா முடக்கியது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மிக தீவிரமான மோதல் ஏற்பட்ட பிறகு இரண்டு முறை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சிறிய விவாதங்களை மேற்கொண்டதும்,

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் இரு தரப்பும் விரைந்து சண்டையை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.