இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஆக்சிஜன் கன்டெய்னர்கள்

  • Tamil Defense
  • May 3, 2021
  • Comments Off on இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஆக்சிஜன் கன்டெய்னர்கள்

நாடு முழுதும் கொரானாவுக்கு எதிரான போரில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஆக்சிஜன் கன்டெய்னர்களை உள்நாட்டுக்குள்ளும், வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்குள் கொண்டு சென்று வருகிறது.

அந்த வகையில் இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஜெர்மனியின் ஃப்ராங்புர்ட் நகரில் இருத்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஹின்டன் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும மற்றும் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் பிரிஷ் நோர்டன் தளத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.

இது தவிர உள்நாட்டுக்குள்ளும் ஆக்சிஜன் சிலிண்டர்களை விமானப்படை விமானங்கள் இடமாற்றி வருகிறது.