
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்தி கொள்ளாவிட்டால் காசாவில் அமீரகம் செய்யவிருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் இதர முதலீடுகளை நிறுத்தி கொள்ளும் என அந்நாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த கோடை காலத்தில் எரிசக்தி சார்ந்த எரு திட்டத்தை காசாவில் ஐக்கிய அரபு அமீரகம் துவங்கி வைக்க இருந்தது ஆனால் தற்போது சண்டை காரணமாக அது நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசானது ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் காசா மக்களை மீண்டும் மீண்டும் ஆபத்தில் தள்ளுவதாக கருதுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேல் அமீரகம் பஹ்ரைன் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்த்த்திற்கு பிறகு இஸ்ரேலுக்கு அமீரகம் ஆதரவு தெரிவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த அமைதி ஒப்பந்தங்களை ஒரு சில பாலஸ்தீனிய தவைவர்கள் ஆதரித்தனர் அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் மஹ்மூத் தஹ்லான்.
இவருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதையடுத்து அமீரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட பாலஸ்தீன தலைவர்கள் அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தங்களை ஆதரிக்க காரணம் அதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு அமைதியும் மக்களுக்கு நல்லதும் கிடைக்கும் என நம்புவதாலேயே ஆகும்.