
இரஷ்யாவின் மாஸ்கோவில் வெற்றிதின அணிவகுப்பில் இடம்பெற்ற ஐந்து பயங்கர ஆயுதங்களை பற்றி அமெரிக்க மேகசின் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.போர் ஏற்படுமாயின் இரஷ்யாவின் வெற்றிக்கு இந்த ஆயுதங்கள் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.அவற்றை காணலாம்.
இந்த லிஸ்டில் முதலாக வருவது Armata குடும்ப கவச வாகனங்கள் தான்.T-14 Armata முதன்மை போர் டேங்க் மற்றும் T-15 Armata கனரக சண்டையிடும் வாகனம்.இது போன்ற ஒரு சண்டையிடும் வாகனம் நேட்டோ படையில் கூட இல்லை என அமெரிக்க இராணுவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.2018க்கு பிறகு இந்த டி-15 கவச வாகனத்தில் 57மிமீ தானியங்கி துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.இது தவிர 4 டேங்க் எதிர்ப்பு 9M120 Ataka-V ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக RS-24 Yars ஏவுகணை.அணிவகுப்பில் இடம்பெற்ற ஒரே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இதுதான்.பல தனித்த இலக்குகளை தாக்கும் வண்ணம் Multiple warhead-களை இந்த ஏவுகணை பெற்றிருக்கும்.இது எவ்வளவு தூரம் தாக்கும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
மூன்றாவதாக Uran-9 ஆளில்லா தரைப்படை வகை தாக்கும் வாகனம் ஆகும்.அதாவது ரிமோட்டால் இயக்கக்கூடிய டேங்க் என்றே கொள்ளலாம்.சிறப்பு படை ஆபரேசன்களில் இந்த வாகனத்தை உபயோகிக்கலாம்.
நான்காவதாக Dagger ஹைப்பர்சோனிக் ஏவுகணை.2018 லேயே இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்த முறை மிக்-31கே விமானத்தில் பொருத்தப்பட்டு அணிவகுப்பில் இடம்பெற்றது.அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலுக்கு மட்டுமல்ல அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இது பெரிய அச்சுறுத்தலாக அமைய உள்ளது.இந்த ஏவுகணை 1500 முதல் 2000கிமீ வரை செல்லும்.
கடைசியாக எஸ்-400 ஏவுகணை அமைப்பு.குறைதூர முதல் நெடுந்தூரத்தில் வரும் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை அமைப்பு.