இலங்கையில் சீன காலனி நகரம் தமிழக காவல்துறை உச்சபட்ச உஷார் நிலை !!

  • Tamil Defense
  • May 31, 2021
  • Comments Off on இலங்கையில் சீன காலனி நகரம் தமிழக காவல்துறை உச்சபட்ச உஷார் நிலை !!

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே கடலில் சுமார் 289 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு மிகப்பெரிய பிரமாண்ட துறைமுக நகரம் அமைய உள்ளது, இதன் கட்டுமான பணிகளை சீனா மேற்கொள்ளும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த நகரம் இலங்கை அரசால் நிர்வகிக்கப்பட்டாலும் அதன் கட்டுபாடு சீனா வசமே இருக்கும் எனவும் இது சீனாவின் காலனி நகரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் இலங்கையில் எதிர்கட்சிகள் மட்டுமின்றி , நாடு கடந்த தமிழீழ அரசிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பலைகளை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. திரிபாதி மாநிலத்தில் உள்ள இலங்கை மற்றும் சீன தூதரங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும்,

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் மேற்குறிப்பிட்ட தூதரகங்கள் மற்றும் பிற இடங்களில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழக காவல்துறை உச்சபட்ச உஷார் நிலையில் விழிப்பாக பணியாற்றி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.