
கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் அப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒரு பெண் மென்பொருள் பொறியாளர் கொல்லப்பட்டார்.
அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேடிவந்தது அப்போது ஒருவனை தவிர மற்றவர்களை மத்திய பிரதேச மாநிலத்தில் மற்றொரு பயங்கரவாத வழக்கில் கைது செய்தது.
இந்த நிலையில் நேற்று பெரியமேடு காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவனை சிசிடிவி உதவியுடன் அடையாளம் கண்டு செய்தனர், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ரஃபிக் என்பது தெரிய வந்த நிலையில்,
அவனது பெயர் 2014 குண்டுவெடிப்பு வழக்கில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர், உடனடியாக சி.ஐ.டி போலீசார் மேற்படி விசாரணையை நடத்தி தேசிய புலனாய்வு முகமையிடம் தகவல் அளித்தனர்.
ரஃபிக் அல் உம்மா எனும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர் எனவும் ஆரம்ப காலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கைதானவன் என்பதும், 10 வருடம் முன்னர் கள்ளநோட்டுகளை பெற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் சென்றதும் தெரிய வந்தது.
தற்போது இந்த கொள்ளையில் சுமார் அவனது சகா யாசினுடன் சேர்ந்து 7.5 லட்சம் ரொக்கம் மற்றும் 9 லட்சம் மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தது குறிப்பிடத்தக்கது.