மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அனந்தநாக்கின் கோகெர்நாக் ஏரியாவில் உள்ள வைலூ என்னுமிடத்தில் இந்த என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய இந்த ஆபரேசனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.