விரைவில் பாகிஸ்தான் எல்லையில் தேஜாஸ் !!
1 min read

விரைவில் பாகிஸ்தான் எல்லையில் தேஜாஸ் !!

இந்த வருடத்தின் மத்திய பகுதியில் இலகுரக தேஜாஸ் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன, இதற்காக தங்களது தாய் தளமான கோவை சூலூரில் இருந்து எல்லைக்கு அவை செல்ல உள்ளன.

ஏற்கனவே நடைபெற்று இருக்க வேண்டிய இந்த நடவடிக்கை கொரோனா தொற்று மற்றும் பேரிடரை கொண்டு இந்திய விமானப்படையால் தள்ளி போடப்பட்டு தற்போது நடைமுறைக்கு வருகிறது.

அடுத்த இரண்டு மாதத்தில் கோவை சூலூரில் உள்ள இரண்டாவது தேஜாஸ் படையணிக்கு மீதமுள்ள விமானங்களும் ஒப்மடைக்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.