தில்லி ராணுவ மருத்துவமனை கமான்டன்ட் தீடிர் இடமாற்றம் !!

மேஜர் ஜெனரல் வசு வர்தன் தில்லி ராணுவ மருத்துவமனையின் கமான்டன்ட் ஆக பணியாற்றி வந்த நிலையில் தீடிரென தில்லி ஆர்.ஆர் ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது ஆர்.ஆர் மருத்துவமனையில் கூடுதல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ராணுவ மருத்துவமனையில் இருந்து ஏன் தீடிரென இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே அவர் ஒய்வு பெற சில மாதங்களே உள்ள நிலையில் மற்றொரு மருத்துவமனைக்கு கூடுதல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும், மேலும் ஆவர் விட்டு சென்ற இடத்திற்கு புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏதேனும் மறைமுக ஒழுங்கு நடவடிக்கையா என்ற கேள்வி முன்னாள் மற்றும் இன்னாள் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.