இந்திய விமானப்படையில் ஸ்க்வாட்ரன் லீடர் அந்தஸ்து கொண்ட அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆஷ்ரிதா வி ஒலெட்டி.
இவர் சமீபத்தில் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான சோதனை பொறியாளராக மதிப்புமிக்க இந்திய விமானப்படை சோதனை விமானி பயிற்சி பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விமான சோதனை பொறியாளர்கள் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட வானூர்திகளின் சோதனை ஒட்டத்தை வழிநடத்தி கண்காணித்து தகவல்களை சேகரித்து குறைகளை களைந்து விமானத்தை பயன்பாட்டிற்கு ஏற்ற விமானமாக மாற்றும் முக்கிய பணியை மேற்கொள்பவர்கள் ஆவர்.