இந்தியாவுக்கு தென்கொரிய இலகுரக டாங்கி ??

  • Tamil Defense
  • May 3, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு தென்கொரிய இலகுரக டாங்கி ??

தென்கொரிய நிறுவனமான ஹான்வஹா இந்திய தரைப்படைக்கு இலகுரக டாங்கிகளை வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

இந்த இலகுரக டாங்கியானது கே21 சேஸ்ஸியின் மேல் 105 மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இந்திய தரைப்படை சுமார் 350 இலகுரக டாங்கிகளை வாங்க அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்திய தரைப்படை 25 டன்களுக்கு மிகாமல் பல்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இலகுரக டாங்கியை பெற விரும்புகிறது.

இந்த 350 டாங்கிளும் படிப்படியாக படிப்படியாக பல கட்டங்களாக பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட தரைப்படையின் அறிவிக்கைக்கு நிறுவனங்கள் ஜூன் மாதம் 18ஆம் தேதிக்கு முன்னர் பதில் அளிக்க வேண்டும்.

ஹான்வஹா நிறுவனத்தின் கே9 வஜ்ரா தானியங்கி பிரங்கியை நாம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.