
இந்திய இராணுவத்திற்கு தனது K21-105 Light Tank-ஐ வழங்க தயாராக இருப்பதாக Hanwha Defense நிறுவனம் கூறியுள்ளது.இதற்கான ஒப்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் அந்நிறுவனம் இந்தியாவில் Larsen & Toubro (L&T) நிறுவனத்துடன் இணைந்து இந்த டேங்குகளை தயாரிக்கும்.
மலைப் பகுதிகளில் நிலைநிறுத்துவதற்காக இந்திய ராணுவத்திற்கு 350 இலகு ரக டேங்குகளை தேவையாக உள்ளதாக இராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த டேங்குகள் பெறப்படும் எனவும் கூறியிருந்தது.
இந்த தென் கொரிய நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் L&T நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் K9 Vajra-T 155 mm/52-calibre ஹொவிட்சர் துப்பாக்கிகளை தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கியது.