சவுதி பாகிஸ்தான் இடையே நட்பு துளிர்க்கிறதா ??

  • Tamil Defense
  • May 11, 2021
  • Comments Off on சவுதி பாகிஸ்தான் இடையே நட்பு துளிர்க்கிறதா ??

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீண்டும் மோசமடைந்துள்ள உறவுகளை சீர்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது இதனையடுத்து சவுதி மற்றும் பாகிஸ்தான் இடைய உரசல் ஏற்பட்டு உறவுகள் மோசமடைந்தன.

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெட்டா விமான நிலையத்தில் சவுதி அரேபியாவின் தற்போதைய ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மான் அவரை வரவேற்றார், பின்னர் ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை சவுதி அரேபியா கண்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளிப்படையாகவே பேசியது, இதற்கு சவுதி செவி சாய்க்கவில்லை.

அதை போலவே பாகிஸ்தான் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தை சவுதி கூட்ட வேண்டும் இல்லையென்றால் பாகிஸ்தானே அதை செய்யும் என மிரட்டல் விடுத்தது.

இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக சவுதி தன்னை தானே முன்னிறுத்தி கொள்கிறது, அந்த பிம்பத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை சவுதி அரேபியா சுத்தமாக விரும்பாது.

இதையெல்லாம் தொடர்ந்து தற்போது இரு நாடுகளும் முதல்முறையாக நெருங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின ஒன்று எரிசக்தி, உள்கட்டமைப்பு, நீர் , போதை பொருள் கடத்தல் பற்றியது.

மற்றொன்று இரண்டு நாடுகளும் சவுதி பாகிஸ்தான் இடையே ஒரு புதிய ஒருங்கிணைப்பு கவுன்சில் அமைப்பது பற்றியதாகும்.