உலகின் மிகச்சிறிய ட்ரோன் இந்தியாவில் தயாரிப்பு

ஏற்கனவே இந்திய ராணுவத்தில் ப்ளாக் ஹார்னெட் ட்ரோன் எனும் உலகின் மிகச்சிறிய ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தற்போது இந்திய நிறுவனமான அயான் ஆட்டனாமஸ் சிஸ்டம்ஸ் ஸ்பை-டி எனப்படும் மிகச்சிறிய ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த ட்ரோனானது மேற்குறிப்பிட்ட ப்ளாக் ஹார்னெட் ட்ரோனை போன்றதாகும், இவற்றை மிக நெருக்கமான பகுதிகளில் சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்பை-டி ரக ட்ரோன்கள் மீது இந்திய தரைப்படை தனிப்பட்ட ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.