
நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாட்டு ராணுவங்கள் இடையேயான முதலாவது வான் பாதுகாப்பு போர் பயிற்சி துவங்கியது.
“ஸ்கை கார்டு -1” (SKY GUARD-1) என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியானது சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது இந்த பயிற்சிகளில் வான் பாதுகாப்பு குறித்த முக்கிய நுட்பங்கள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயிற்சியானது இருநாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் இருநாட்டு ராணுவங்களிடையேயான புரிதலை மேம்படுத்த உதவும் எனவும் பல வான் இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்குவது போன்ற முக்கிய பயிற்சிகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.