செயல்பாட்டுக்கு வரும் இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரான்

  • Tamil Defense
  • May 18, 2021
  • Comments Off on செயல்பாட்டுக்கு வரும் இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரான்

மே மாதம் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வருகிறது !!

வருகிற 19-20 ஆகிய நாட்களில் ஃபிரான்ஸ் நாட்டின் மெரிக்னாக் படைதளத்தில் இருந்து நான்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டு இந்தியா நோக்கி வரவுள்ளன.

இந்த நான்கு ரஃபேல் விமானங்களை கொண்டு இந்திய விமானப்படையின் 101ஆவது படையணியான “சாம்ப் ஃபால்கன்ஸ்” மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா படைத்தளத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்களின் வருகையானது ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் டேங்கர் விமானங்களின் இருப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக இதுவரை ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து அதாவது 36 ரஃபேல் போர் விமானங்களும் டெலிவரி செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த மாத இறுதியில் இந்திய விமானப்படையில் சுமார் 24 ரஃபேல் போர் விமானங்கள் இருக்கும் எனவும் 7 விமானங்கள் ஃபிரான்ஸில் பயிற்சிக்காக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹஷிமாரா படைத்தளம் ரஃபேல் விமானங்களுக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டு உள்ளது, அமைதி காலத்தில் விமானங்கள் இங்கிருந்து செயல்படும் ஆனால் போர்க்காலத்தில் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் செயல்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.