
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையான தாஹ்லாவை தீவிர சண்டைக்கு பிறகு தாலிபான்கள் கைபற்றி உள்ளனர் என ஆஃகன் அரசு தெரிவித்துள்ளது.
இதனை தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் காரி யூசூஃப் அஹ்மாதியும் உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளான்.
இந்த அணையானது மிகப்பெரிய அளவில் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு பின்னர் இந்த அணை கைபற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.