ரஷ்யாவின் மிக்35 கடைசி கட்ட சோதனைகளில் !!

மிக்35 திட்ட இயக்குநர் முஷெக் பலோயன் பேசும்போது மிக்35 இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளதாகவும் விமானிகளுக்கு விமானத்தை பிடித்து இருப்பதாகவும் கூறினார்.

இந்த விமானத்தை ரஷ்யா 4++ தலைமுறை விமானம் என கூறியுள்ளது, ஆனால் இது மிக்29 விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்ற கருத்தும் உலா வருகிறது.

மிகோயான் குரேவிச் நிறுவனமானது கடந்த 2007ஆம் ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியில் மிக்35 விமான திட்டத்தை அறிவித்தது,ஆனால் 2019ஆம் ஆண்டு தான் தயாரிப்பு நிலையை அடைந்தது.

இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன, ஒற்றை இருக்கை விமானத்தை மிக்35எஸ் எனவும் இரட்டை இருக்கை விமானத்தை மிக்35யுபி எனவும் மிக் நிறுவனம் வகைபடுத்தி உள்ளது.

இந்த விமானத்தில் புதிய துல்லிய தாக்குதல் அமைப்பு, அடையாளம் காணும் அமைப்பு, ஏசா மற்றும் பெசா ரேடார்களை பயன்படுத்தி கொள்ளும் வசதிகள் ஆகியவை இதில் உள்ளன.

மிக்35 விமானத்தின் பயன்பாட்டு செலவானது மிக்29 விமானத்தின் பயன்பாட்டு செலவை விடவும் சுமார் 80% குறைவாகும் எனவும் இது நீண்ட காலத்தில் மிகவும் பயனளிக்கும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.