அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் சீரியாவில் !!

ரஷ்ய ராணுவம் நேற்று முன்தினம் அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட தொலைதூர குண்டுவீச்சு விமானங்களை சிரியாவுக்கு அனுப்பி உள்ளதாகவும், மத்திய தரைக்கடல் பகுதியில் தங்களது இருப்பை பலப்படுத்தும் எனவும் அறிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் மூன்று “TU-22 M3” ரக குண்டுவீச்சு விமானங்கள் சிரியாவில் உள்ள ஹெமெய்மீம் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த தளம் சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் அமைந்துள்ளதாகவும் சிரியா மற்றும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முக்கிய ராணுவ கேந்திரமாகவும் இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.