
ரஷ்யாவின் சுகோய் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகின் முதல் இலகுரக ஸ்டெல்த் போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அதிகபட்சமாக 18 டன்கள் வரை சுமக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவின் தேஜாஸ் மற்றும் ஸ்வீடனுடைய க்ரைப்பன் ஆகியவை முறையே 17.5 டன்கள் மற்றும் 16.5 டன்கள் எடையுடன் இதே வகுப்பில் வந்தாலும் அவை ஸ்டெல்த் அல்லது 5ஆம் தலைமுறை போர் விமானங்களாக கருதப்படாது.

காரணம் இந்த இயண்டு போர் விமானங்களும் பல ரேடார் சமிக்ஞை கட்டுபடுத்தல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் ஒரு முழு ஐந்தாம் தலைமுறை அல்லது ஸ்டெல்த் போர் விமானத்தை போலில்லாமல் ஆயுதங்களை வெளிப்புறம் சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஆகவே இந்த புதிய ரஷ்ய இலகுரக ஸ்டெல்த் போர் விமானமானது ஒரு உண்மையான ஐந்தாம் தலைமுறை விமானத்துக்கே உரித்தான “உள் ஆயுத கிட்டங்கியை” (Internal Weapons Bay) கொண்டிருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் எஃப்35 மற்றும் எஃப்22 விமானங்களை போலில்லாமல் குறைந்த அளவிலான ஆயுதங்களை மட்டுமே சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போர் விமாறத்தில் சு57 விமானத்தில் பயன்படுத்தப்படும் இஸ்டலியே-30 ரக என்ஜின் பயன்படுத்தப்படும் இது சுமார் 180கிலோநியுட்டன் உந்துவிசையை அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.