ரஃபேல் மூலம் அணு ஆயுத தாக்குதல் ஒரு பார்வை !!

36 ரஃபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்த நிலையில் தற்போது 20க்கும் அதிகமான ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன.

இவற்றின் வரவு இந்திய துணை கண்ட பிராந்தியத்தின் வான்பகுதியில் நமது கை ஓங்கி இருப்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் திறன்களை பன்மடங்கு வலுப்படுத்தி உள்ளது.

படையில் இணையவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் கணிசமான விமானங்கள் இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு பொறுப்பான ஸ்ட்ராட்டஜிக் படைகள் கட்டளையகத்தின் கீழ் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணியை சுமார் 20 நீண்ட வருடங்களாக மிராஜ்2000 போர் விமானங்கள் கையாண்டு வந்த நிலையில் தற்போது புதிதாக இணைந்த அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் அப்பணியை மேற்கொள்ள உள்ளன எனவும்,

நமது “எஃப்-3 ஆர்” ரக ரஃபேல் போர் விமானங்கள் இரவில் பறக்கவும், தடுமையான கால சூழல்களில் தங்கு தடையின்றி இயங்கவும், கண்காணிப்பு அமைப்புகளில் சிக்காமல் இயங்கவும் முடியும் இதன் மூலம் எதிரி இலக்குகளை ரகசியமாக சென்று அணு ஆயுதங்களால் தாக்க முடியும்,

மேலும் இந்த போர் விமானங்களில் உள்ள ஸ்பெக்ட்ரா எனும் மின்னனு போரியல் அமைப்பானது நமது ரஃபேல் போர் விமானம் ரகசியமாக சென்று தாக்கிவிட்டு பத்திரமாக திரும்புவதை உறுதி செய்யும்.

ஆக நமது ரஃபேல் போர் விமானங்களால் ஒரு முழு அளவிலான போரின் போது தேவை ஏற்படும் பட்சத்தில்அணு ஆயுத தாக்குதல் நடத்தவும், எதிர அணு ஆயுதங்களை அழிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.