முக்கிய ஹமாஸ் தலைவரை சந்தித்த கத்தார் வெளியுறவு அமைச்சர் !!

  • Tamil Defense
  • May 16, 2021
  • Comments Off on முக்கிய ஹமாஸ் தலைவரை சந்தித்த கத்தார் வெளியுறவு அமைச்சர் !!

கத்தார் வெளியுறவு அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கத்தார் தலைநகர் தோஹாவில் முக்கிய ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹானியேவை சந்தித்து உள்ளார்.

கத்தார் வெளியுறவு அமைச்சர் சர்வதேச நாடுகள் உடனடியாக செயல்பட்டு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் கத்தார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான அல் ஜசீராவின் அலுவலக கட்டிடம் அழிக்கப்பட்டது பற்றிய எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அரபு லீக் தலைவர் அஹமது அபுல் கெய்ட் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

ஐக்கிய நாடுகள் சபைக்கான அரபு நாட்டு தூதர்கள் இதற்கான நடவடிக்ககளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.