Breaking News

ஒருபுறம் இனிப்பு மறுபுறம் ஆயுதம்; அதிர்ச்சியூட்டும் பாக்கின் செயல்

  • Tamil Defense
  • May 15, 2021
  • Comments Off on ஒருபுறம் இனிப்பு மறுபுறம் ஆயுதம்; அதிர்ச்சியூட்டும் பாக்கின் செயல்

முதுகில் குத்துவது என்பது எப்போதுமே பாக்கின் செயல் தான்.கடந்தகாலத்தில் எத்தனையோ முறை இந்தியத் தலைவர்கள் பாக் உடன் நட்புடன் கைகுலுக்க முயன்றாலும் அவர்கள் இந்தியா வந்தவுடன் பாக் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை இந்தியா மீது நடத்தியிருக்கும்.அதே போல தான் தற்போதும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பா செக்டாரில் பாக் ட்ரோன்கள் மூலம் ஆயுதம் கடந்த முயன்றதை வெற்றிகரமாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர்.நமது வீரர்கள் ஈத் பெருநாளை முன்னிட்டு பாக் வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய சில மணி நேரத்திற்குள்ளயே இந்த சம்பவத்தை பாக் நடத்தியுள்ளது.

சம்பா பகுதியில் ட்ரோன் நடமாட்டம் தென்படுவதை அடுத்து பிஎஸ்எப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.11.30 மணி அளவில் இந்திய எல்லையின் 250மீ குள் ஆயுதங்கள் பாலீத்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்துள்ளது.

அதில் இருந்த ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.