நைஜீரியாவுக்கு போர் விமானம் விற்பனை செய்த பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • May 23, 2021
  • Comments Off on நைஜீரியாவுக்கு போர் விமானம் விற்பனை செய்த பாகிஸ்தான் !!

பாகிஸ்தான் மூன்று JF-17 ரக போர் விமானங்களை நைஜீரிய விமானப்படைக்கு அந்நாட்டில் உள்ள மகுட்ரி படைத்தளத்தில் வைத்து வழங்கியது.

இந்த விழாவில் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்ட பாக் விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் சயத் நோமன் அலி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் இந்த நிகழ்ச்சி பாகிஸ்தான் விமான தயாரிப்பு வயலாற்றில் ஒர் புதிய அத்தியாயம் எனவும் இது நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்புறவுக்கு அடையாளம் என்றார்.

இந்த மூன்று JF-17 ரக போர் விமானங்களும் பாகிஸ்தான் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் ஏரோநாடிக்கல் காம்பளெக்ஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.