இஸ்ரேல்-காசா மோதல் ; இஸ்லாமிய நாடுகள் அவரச கூட்டம்

  • Tamil Defense
  • May 16, 2021
  • Comments Off on இஸ்ரேல்-காசா மோதல் ; இஸ்லாமிய நாடுகள் அவரச கூட்டம்

இஸ்ரேல்-காசா மோதல் இரண்டாவது வாரத்திற்குள் நுழையும் நேரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை சார்ந்த 57 நாடுகளும் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் காசா மீதும் இஸ்ரேல் வான் வழியாக தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.

பிரச்சனை தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் முதன் முறையாக கூடி பேசியுள்ளன.இந்த சந்திப்பின் போது பேசிய பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் காசா மீதான் இஸ்ரேலின் தாக்குதை கோழை தனமான தாக்குதல் என பேசியுள்ளார்.

இதே போலவே துருக்கிய வெளியுறவு அமைச்சரும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதை அடுத்து பேசிய சௌதி வெளியுறவு அமைச்சர் உலக நாடுகள் தலையிட்டு சண்டையை முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.