
இந்திய கடற்படையானது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
NAVNET என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு பல தகவல் தொடர்பு அமைப்புகளுடனும் செயற்கை கோள்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும் எனவும்,
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தனித்தனி பாதுகாக்கப்பட்ட அமைப்புகளையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 70 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றும் இந்த வருடம் ஃபெப்ரவரி மாதம் சுமார் 137 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டாவது ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.