கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் வில்சன் அவ்ரகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.
இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது தீவிர விசாரணைக்கு பின்னர் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம், தவ்ஃபிக், கடலூரை சேர்ந்த காஜா மொஹீதின், ஜாஃபர் அலி, பெங்களூருவை சேர்ந்த மெஹ்பூப் பாஷா மற்றும் ஈஜாஸ் பாஷா ஆகிய 6 பயங்கரவாதிகள் மீதும் சட்டவிரோத செயல்கள் தடைசட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.
விசாரணையின் போது காவல்துறை மற்றும் சமுகத்தில் ஜிஹாத் செய்து அச்சத்தை விளைவிக்கும் நோக்கோடு துணை ஆய்வாளர் வில்சனை கொலை செய்ததாகவும் கூறினர்.
மேலும் தீவிர விசாரணையில் காஜா மொஹீதின் அப்துல் ஷமீம் மற்றும் தவ்ஃபிக் ஆகியோரை 2019ஆம் ஆண்டு முளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் இணைய வைத்து அரசு நிர்வாகம் குறிப்பாக காவல்துறை மீது போர்தொடுத்து ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் விருப்பத்தோடு செயல்பட்ட நிலையில்,
காஜா மொஹீதின் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்குறிப்பிட்ட செயல்களை செய்ய மெஹ்பூப் பாஷா, ஈஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் ஆகியோரிடம் ஆயுதம் வாங்குமாறு உத்தரவு பிறப்பிக்க,
அதே ஆண்டு டிசம்பர் மாதம் மெஹ்பூப் உதவியுடன் தவ்ஃபிக் மற்றும் அப்துல் ஷமீம் ஆகியோரை கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் ஒளித்து வைத்துவிட்டு ஆயுதங்களை ஒப்படைத்தான்.
இந்த நிலையில் ஏற்கனவே பயங்கரவாத வழக்கில் தொடர்புடைய காரணத்தால் விசாரணையில் பெங்களூர் பற்றியு துப்பு கிடைத்து தமிழக காவல்துறை அங்கு சென்று மெஹ்பூப் மற்றும் கூட்டாளிகளை கைது செய்து மற்றவர்களையும் தேடி வந்தது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த காஜா மொஹீதின் அப்துல் ஷமீம் மற்றும் தவ்ஃபிக் ஆகியோரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையோரம் உள்ள காவல் சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறையினரை தாக்குமாறு உத்தரவி பிறபித்தான் இதன் பேரில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி குமரி வந்த இருவரும் எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தனர்.
இதன் பின்னர் பயங்கரவாதிகள் இருவரும் தப்பிச்சென்று கேரளாவின் எர்ணாகுளம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்துவிட்டு கோழிக்கோடு சென்றனர்.
பின்னர் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்டு மஹாராஷ்டிர சென்ற இருவரும் சில நாள் கழித்து கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு வரும்போது மோப்பம் பிடித்த தேசிய புலனாய்வு முகமை கையும் களவுமாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.