அமெரிக்க படைத்தளத்தை தாக்கும் திறன் கொண்ட புதிய சீன ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் !!
சீனா தற்போது ஒர் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை தொலைதூர ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானத்தை தயாரித்து வருவதாகவும் இது குவாம் மற்றும் அதையும் தாண்டிய பகுதிகளை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
சீன பொதுத்துறை நிறுவனமான நோரின்கோ தற்போது சியான்-20 எனப்படும் அந்த குண்டுவீச்சு விமானத்தின் கம்ப்யூட்டர் டிசைன் படங்களை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள் மூலம் இந்த அதிநவீன குண்டுவீச்சு விமானத்தில் ஏவுகணை பகுதி, இரண்டு அட்ஜெஸ்டபள் சிறகுகள், ஒரு ரேடார் போன்றவை உள்ளது தெரிகிறது மேலும் பார்ப்பதற்கு அமெரிக்க பி2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் போல உள்ளது.
இந்த விமானத்தில் பூசப்படும் கருவண்ண பூச்சானது ரேடார் சமிக்ஞைகளை உள்வாங்கும் திறன் கொண்டது எனவும் அதிக காற்றெதிரப்பு தன்மையற்ற சிறகுகள் கொண்டது எனவும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறன் வாயந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விமானத்தின் படங்களை பார்க்கையில் வேகத்தை விடவும் ஸ்டெல்த் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதை தெளிவாக உணர முடிகிறது.
அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படையின் பி2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானமானது சுமார் 7000 மைல்கள் தொலைவு இயக்க வரம்பை கொண்டது என்பது கூடுதல் தகவல்.