கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ மருந்துக்கு அனுமதி !!

  • Tamil Defense
  • May 8, 2021
  • Comments Off on கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ மருந்துக்கு அனுமதி !!

இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணையம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா எதிர்ப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மருத்துவ சோதனைகளில் நோயாளிகள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதும் அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவையை குறைப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த மருந்தில் உள்ள 2-DG அதாவது 2-Deoxy D Glucose தேசிய அணு மருத்துவம் மற்றும் தொடர்பு அறிவியல் கல்லூரியால் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமும், டாக்டர் ரெட்டி ஆய்வகமும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.