புதிய அதிநவீன இடைத்தூர துல்லிய தாக்குதல் ராக்கெட் அமைப்பு பற்றிய கட்டுரை !!

  • Tamil Defense
  • May 8, 2021
  • Comments Off on புதிய அதிநவீன இடைத்தூர துல்லிய தாக்குதல் ராக்கெட் அமைப்பு பற்றிய கட்டுரை !!

இந்திய தரைப்படை மலை பிரதேசங்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான இடைத்தூர துல்லிய தாக்குதல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பினாகா மற்றும் ஸ்மெர்ச் போன்ற அமைப்புகள் திறம்பட மலை பிரதேச பகுதிகளில் செயல்பட முடியாத நிலை உள்ளது.

காரணம் இந்த இரண்டு அமைப்புகளும் மிகப்பெரிய லாரிகளில் இயங்குபவை குறுகிய வளைவுகள் கொண்ட மலை பிரதேச சாலைகளில் இந்த லாரிகளால் செல்ல முடியாது.

ஆகவே 4×4 வாகனத்தில் இந்த புதிய இடைத்தூர துல்லிய தாக்குதல் அமைப்பு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது, இமாலய பகுதிகளில் இது திறம்பட இயங்க முடியம்.

இந்த அமைப்பு ராக்கெட்டுகளை செங்குத்தாக ஏவும் வகையில் வடிவமைக்கப்படும், மேலும் இது சுமார் 25 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பும் 2 மீட்டர் அளவுக்கு துல்லியமாகவும் தாக்கும் .

இந்த ராக்கெட்டுகளில் அகச்சிவப்பு கதிர் சென்சார்கள் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் இருக்கும் மேலும் தானியங்கி முறையிலும் இவை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.