
இந்திய தரைப்படையின் நவீனப்படுத்துதல் திட்டங்கள் சீரான வேகத்தில் சரியான திசையில் போய் கொண்டு இருப்பதாக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் மட்டுமே சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 59 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாகவும்
2020-21 நிதியாண்டில் 5000 கோடி ருபாய் மதிப்பிலான 44 ஒப்பந்தங்கள் மற்றும் சமீபத்தில் கையெழுத்தான 16,000 கோடி மதிப்பிலான 15 ஒப்பந்தங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் பேசுகையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.