மிக்-21 விபத்து ; விமானி வீரமரணம்

பஞ்சாபில் மோகா என்னுமிடத்தில் விமானப்படையின் மிக்-21 விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமான விபத்தில் விமானி வீரமரணம் அடைந்துள்ளார்.

ஸ்குவாட்ரான் லீடர் அபினவ் சௌதாரி அவர்கள் இந்த விமான விபத்தில் வீரமரணம் அடைந்துள்ளார்.

சூரத்கர் விமான தளத்தில் இருந்து இரவு நேர ரோந்து பணியை முடித்து திரும்பி கொண்டிருந்த வேளையில் இந்த விமான விபத்து நடந்துள்ளது.

பறக்கும் சவப்பெட்டி என இந்த மிக்-21 விமானங்கள் அழைக்கப்படுவது வழக்கம்.இன்னும் இந்த விமானங்கள் படையில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளது.

வீரவணக்கம்