#BREAKING தமிழகத்தில் மற்றுமொரு ஐ.எஸ் பயங்கரவாதி கைது !!

  • Tamil Defense
  • May 29, 2021
  • Comments Off on #BREAKING தமிழகத்தில் மற்றுமொரு ஐ.எஸ் பயங்கரவாதி கைது !!

தமிழகத்தின் மயிலாடுதுறை அரீகே நீடூர் பகுதியை சேர்ந்த 25 வயதே நிரம்பிய முஹம்மது ஆஷிக் எனும் ஐ.எஸ் பயங்கரவாதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு உள்ளான்.

இவன் கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த நிலையில் கோயம்புத்தூர் நகரில் பல முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவான்.

இவன் கோயம்புத்தூர் மாவட்டம் மரக்கடை பகுதியை பூர்விகமாக கொண்டவன் இவனுடன் தமிழகத்தை சேர்ந்த வேறு 6 பயங்கரவாதிகளும் இணைந்து இந்த சதித்திட்டத்தை தீட்டி சமுக அமைதிக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்க முயன்றனர்.

தற்போது அனைவரும் கைது செய்யபட்டு தில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் காவல்நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் தடைசட்டம், இ.த.ச-143 மற்றும் இ.த.ச-120B ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.