

நேட்டோஅமைப்பானது ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர்-2021 (STEADFAST DEFENDER-2021) என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான போர் ஒத்திகையை நேட்டோ ஆரம்பித்து நடத்தி வருகிறது.
அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பிய கடல்பகுதிகள் மற்றும் கருங்கடல் பிராந்தியம் என இந்த போர் ஒத்திகையானது பரந்து விரிந்துள்ளது இதற்கு காரணம்ஒரு நேட்டோ நாடு மீது தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை கடல்பகுதிகளை கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு,
சப்ளைகள்,துருப்புக்கள் மற்றும் தளவாடங்களை பல்வேறு இடங்களில் இருந்து கடல்வழியாக ஐரோப்பாவில் உள்ள போர்முனைக்கு நகரத்தி அந்த தாக்குதலை முறியடிப்பதாகும்.
இந்த போர் ஒத்திகையில் பல ஆயிரம் நேட்டோ துருப்புக்கள், இங்கிலாந்து கடற்படையின் குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பல் உள்ளிட்ட பல முன்னணி போர்க்கப்பல்கள், விமானங்கள் ஆகியவை பங்கேற்று உள்ளன.