
நமது இலகுரக தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தில் பயன்படுத்தி கொள்ள பிரிட்டிஷ் எஜெக்ஷன் சீட் தயாரிப்பு நிறுவனமான மார்ட்டின் பேக்கர் தனது புதிய அதிநவீன மார்க்18 ரக இருக்கைகளை ஆஃபர் செய்தனர்.
ஆனால் நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் விமான மேம்பாட்டு முகமை ஆகியவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ம பெயர் பெற்ற மார்ட்டின் பேக்கர் மார்க்16 ஐ.என்16ஜி ரக இருக்கைகளையே பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 51 இருக்கைகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 93 இருக்கைகளுக்கான ஆர்டர் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, மார்ட்டின் பேக்கர் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.
அதை போல தேஜாஸ் விமானத்தில் “கனோபி” அதாவது விமானி அறையின் மேலிருக்கும் கண்ணாடி வெகு விரைவாக பிரிந்து செல்வதை மார்ட்டின் பேக்கர் நிறுவனத்துடன் இணைந்து நமது ARDE மற்றும் HEMRL ஆகியவை உறுதி செய்துள்ளன.
இந்த எஜெக்ஷன் இருக்கைகள் தான் ஆபத்து காலத்தில் விமானிகள் விமானத்தை விட்டு மிக வேகமாக வெளியேறி தப்ப உதவுகின்றன என்பதும்
விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் இந்த நிறுவனம் தயாரித்த எஜெக்ஷன் இருக்கையால் தான் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.