இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா ?? தேஜாஸை சோதிக்க வரும் மலேசிய விமானப்படை !!

  • Tamil Defense
  • May 18, 2021
  • Comments Off on இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா ?? தேஜாஸை சோதிக்க வரும் மலேசிய விமானப்படை !!

சமீபத்தில் இந்திய விமானப்படை மிகப்பெரிய அளவில் சுமார் 83 இலகுரக தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது மேலும் ஏற்கனவே இரண்டு படையணிகள் மார்க்1 போர் விமானங்கள் படையில் உள்ளன.

அதை போலவே அமெரிக்க கடற்படையின் ஜெட் பயிற்சி விமானங்களுக்கு இலகுரக தேஜாஸ் போரி விமானத்தின் கடற்படை ரகத்தை இந்தியா முன்னிறுத்தி உள்ளது.

இவையும் இதுதவிர நமது இலகுரக தேஜாஸின் குறைந்த விலை மற்றும் அதில் உள்ள பல தொழில்நுட்ப விஷயங்கள் பல்வேறு நாட்டு விமானப்படைகளின் ஆர்வத்தௌ தூண்டி உள்ளது.

அந்த வகையில் இலகுரக தேஜாஸ் போர் விமானம் மலேசிய விமானப்படையின் இலகுரக போர் விமான ஒப்பந்தத்தில் தேஜாஸும் உள்ளது.

இந்தியா மலேசியாவை கவரும் வகையில் ஏற்கனவே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு போன்ற பணிகளை மலேசியாவிலேயே செய்து தர ஒரு மையத்தை அமைப்பதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மாத இறுதியில் மலேசிய விமானப்படை குழு ஒன்று இந்தியா வர உள்ளது அக்குழு விமானத்தை சோதித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் தேஜாஸ் தேர்வு செய்யப்பட்டால் உலகில் போர் விமானம் தயாரித்து ஏற்றுமதி செய்யும் சொற்ப நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து வரலாற்று சாதனையை படைக்கும் என்றால் அது மிகையல்ல.

மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தானுடைய ஜே.எஃப்-17 மற்றும் தென் கொரியாவின் கே.எஃப்-21 ஆகியவை உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.