
இந்திய தரைப்படையில் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் ராணுவ அதிகாரியாக இணைய இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது தேசிய பாதுகாப்பு பயிற்சி மையம் இரண்டாவது கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையம்.
இதில் பீஹார் மாநிலம் கயாவில் அமைந்துள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இணைய இதுவரை 12ஆம் வகுப்பில் 70% மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகியவற்றை பயின்று இருக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த நுழைவில் தரைப்படை ஒரு மாற்றத்தை செய்துள்ளது அதன்படி இனி மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் JEE Mains நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியமாகும்.
இந்த நுழைவு திட்டம் வாயிலாக பயிற்சியில் இணையும் பயிற்சி அதிகாரிகள் சுமார் 4 வருட பொறியியல் படிப்புடன் ராணுவ பயிற்சியும் பெறுவர்.
இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளாக நியமிக்கப்படுவர் ஆகவே இந்திய தரைப்படை இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.