கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பான் புதிய கொள்கை ஒன்றை அமல்படுத்தியது அதன்படி பிற நாடுகளுக்கு தாக்குதல் ஆயுதங்களை தவிர்த்து உயிர்காப்பு மற்றும் கண்காணிப்பு தளவாடங்களை விற்க முடியும்.
அந்த வகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கு இடைய கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி சுமார் 1.1mn $ டாலர் மதிப்பிலான ரேடார்களை மிட்ஷூபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் விற்க உள்ளது.
அந்த வகையில் தற்போது ஃபிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு சுமார் 1.1 மில்லியன் டாலர் மதிப்பில் ஜாக்ஹாம்மர்கள், என்ஜின் கட்டர்கள்,சோனார் போன்ற கருவிகளை ஜப்பான் விற்க உள்ளது.
இந்த கருவிகளின் டெலிவரி முடிந்தபின்னர் ஜப்பான் பாதுகாப்பு படை வீரர்கள் ஃபிலிப்பைன்ஸ் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க செல்வர் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2016-18 இடையிலான காலகட்டத்தில் 10 44மீட்டர் நீளம் கொண்ட ஜப்பானிய ரோந்து கலன்களை ஃபிலிப்பைன்ஸ் பெற்று கொண்டது,
மேலும் கூடுதலாக 2022ஆம் ஆண்டு சுமார் 94மீட்டர் நீளம் கொண்ட இரண்டு ரோந்து கலன்களை ஃபிலிப்பைன்ஸ் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.