அடுத்த தலைமுறை கனரக ஏவு வாகனத்தை தயாரிக்க உள்ள இஸ்ரோ !!

  • Tamil Defense
  • May 13, 2021
  • Comments Off on அடுத்த தலைமுறை கனரக ஏவு வாகனத்தை தயாரிக்க உள்ள இஸ்ரோ !!

இஸ்ரோ அமைப்பானது ஐந்து தலைமுறை ஏவு வாகனங்களை தயாரித்து இயக்கியுள்ளது SLV-3, ASLV, PSLV, GSLV கடைசியாக GSLV MK3 தற்போது அடுத்த தலைமுறை ஏவு வாகனம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த புதிய ஏவு வாகனமானது HLV-1 மற்றும் HLV-2 என இரு வடிவங்களை கொண்டிருக்கும் இதில் HLV-1 மூலமாக சுமார் 5 டன் எடையுள்ள பொருளை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.

மேலும் HLV-2 ராக்கெட் மூலமாக சுமார் 7.5 டன் எடையுள்ள GTO சுற்றுவட்ட பாதையிலும் சுமார் 23 டன் எடையுள்ள பொருளை LEO சுற்றுவட்ட பாதையிலும் நிலைநிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிக சிறிய செயற்கை கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வகையில் NSLV எனும் ஏவு வாகனத்தை வடிவமைக்கும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது, இது இஸ்ரோ அமைப்பின் மிகச்சிறிய ராக்கெட் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.