
இஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் அதாவது லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து மூன்று க்ராட் ரக ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளது.
இதனையடுத்து இஸ்ரேலிய ராணுவம் பிரங்கி தாக்குதல்கள் மூலமாக ராக்கெட் ஏவப்பட்ட பகுதியை தாக்கி பதிலடி கொடுத்துள்ளது.
இதுபற்றி பேசிய லெபனான் ராணுவ அதிகாரி “லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஷேபா ஃபார்ம்ஸ் பகுதியில் இருந்து தான் ராக்கெட்டுகள் ஏவபட்டதாகவும் அந்த பகுதி இஸ்ரேலிய ராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும்” தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையை பாதுகாக்கும் ஐ.நா பாதுகாப்பு படையினர் தற்போது எல்லையில் அமைதி நிலவுவதாகவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய ராணுவம் நாட்டின் வடக்கு எல்லையை ஒட்டிய பகுதிகளில் முதல் 4 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து பங்கர்களையும் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.