இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • May 21, 2021
  • Comments Off on இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஒரு பார்வை !!

கடந்த 11 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இடையே நடந்த சண்டை இன்று முடிவுக்கு வந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் எகிப்தின் தலையீடு ஆகும்.

11 நாட்களில் பலத்த இழப்பை சந்தித்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தங்களுக்கு உதவிடுமாறு பல முறை எகிப்திடம் உதவி கோரியது இதனையடுத்து இஸ்ரேலுடன் ஒரளவுக்கு நல்லுறவை பேணும் எகிப்து பேச்சுவார்த்தையில் இறங்கியது.

பின்னர் நேற்று இஸ்ரேலிய கேபினட் இதனை பரிசீலித்து ஏற்று கொண்டதாக அறிவித்தது இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள மிக முக்கிய காரணம் இந்த சண்டை நிறுத்தம் எவ்வித நிபந்தனையும் இன்றி இருந்தது ஆகும்.

அந்த வகையில் சண்டையின் போதும் சண்டை நிறுத்ததிற்கு பிறகும் இஸ்ரேலின் கை ஓங்கியே உள்ளது, அமெரிக்க அரசும் இதில் குறிப்பிட்ட பங்கு வகித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை நிறுத்தத்தை ஏற்று கொள்வதாக இஸ்ரேல் அறிவித்த அந்த நொடி வரை ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேலிய விமானப்படை தாக்கி கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.