இஸ்ரேல் ஷிப்யார்டஸ் எனும் முன்னாள் இஸ்ரேலிய பொதுத்துறை நிறுவனமானது ஷால்டாக்-5 எனும் அதிவேக ரோந்து கலன்களை தயாரித்து வருகிறது.
இந்த ஷால்டாக்-5 அதிவேக ரோந்து கலன்களால் ஏவுகணைகளை ஏவ முடியும் மேலும் சந்தேகத்திற்கு இடமான கப்பல்கள், கலன்கள் மற்றும் படகுகளை வேகமாக சென்று இடைமறிக்க உதவும்.
ஃபிலிப்பைன்ஸ் கடற்படையானது இந்த வகை படகுகளை தனது படையை வலுப்படுத்த தேர்வு செய்துள்ளது மட்டுமின்றி பதட்டம் நிறைந்த மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடலில் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளது.
அந்த வகையில் கடந்த ஃபெப்ரவரி மாதம் நான்கு ஷால்டாக்-5 ரக ரோந்து கலன்களை ஃபிலிப்பைன்ஸ் வாங்க முடிவு செய்த நிலையில் மேலும் ஒரு ரோந்து கலனை இலவசமாக வழங்க இஸ்ரேல் ஷிப்யார்டஸ் நிறுவனம் முன்வந்தது.
அதன்படி நான்கு ஷால்டாக்-5 ரக ரோந்து கலன்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கேவைட் ஷிப்யார்டஸ் நிறுவனத்தால் கட்டப்படும் ஒன்று இஸ்ரேல் ஷிப்யார்டஸ் நிறுவனத்தாலேயே கட்டபட்டு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பானது ஃபிலிப்பைன்ஸ் பணமான பீசோவில் சுமார் 6.2 பில்லியன் ஆகும், இது இத்தகைய அதிநவீன கலன்களுக்கு தகுந்த விலை தான் என கூறப்படுகிறது.
இந்த ஷால்டாக்-5 ரக ரோந்து கலன்களானது தற்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படை பயன்படுத்தி வரும் டாமஸ் படில்லோ ரக ரோந்து கலன்களுக்கு மாற்றாக வருகிற 2022ஆம் ஆண்டுவாக்கில் படையில் இணையும் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.