ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களின் இலக்குகளை இஸ்ரேல் நேற்று (வெள்ளிக்கிழமை) மிக கடுமையாக தாக்கியது.முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் வீடுகளின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.இதில் ஹமாசிற்கு சொந்தமாக முக்கிய காவல்சார் இடமும் தகர்க்கப்பட்டது.
மேலும் சுரங்க பாதைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
160 விமானங்கள்,டேங்க் மற்றும் ஆர்டில்லரிகள் சகிதம் காசா மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.160 விமானங்கள் 450 ஏவுகணைகள் உதவியுடன் 150 இலக்குகளை 40நிமிடத்தில் தாக்கியழித்துள்ளன.
ஹமாஸ் இன்னும் சண்டையில் உள்ளதாகவும் சண்டையை நிறுத்தவில்லை என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் நடத்திய இராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சண்டையில் 31 குழந்தைகள்,20 பெண்கள் உள்ளிட்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.மறுபுறம் இஸ்ரேலில் ஒரு இந்தியர் , இரு குழந்தைகள்,1 வீரர் உள்ளிட்டு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் உள்ள ஹமாஸ் மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.