சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு இஸ்ரேல் காசாவில் வெற்றி பெற்றதாக கூறினார்.
மேலும் பேசும்போது காசாவில் இருந்து வருங்காலத்தில் ராக்கெட் ஏவப்படும் பட்சத்தில் மிக மிக கடுமையான பதிலடியை சந்திக்க நேரிடும் அதன் வீரியம் இதுவரை பார்த்திராத அளவில் இருக்கும் என எச்சரித்தார்.
மேலும் ஹமாஸ் இயக்கத்தின் எந்தவொரு தாக்குதலும் வருங்காலத்தில் துளியும் சகித்து கொள்ளப்படாது அதற்கான பதிலடி நிச்சயமாக கொடுக்கப்படும் என்றார்.
பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் பேசுகையில் காசாவில் பெற்ற வெற்றியை இஸ்ரேல் திறம்பட உபயோகித்து கொள்ள வேண்டும் எனவும்,
அதற்கு தனது ராஜாங்க உறவுகள் வழியாக புதிய கட்டமைப்பை ஹமாஸ் தலைவர்களுடைய வீடுகளின் சிதிலங்கள் மீது உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.