
இன்று காலை காசாவில் அமைந்துள்ள முக்கியமான ஹமாஸ் தளபதியான யெகியேஹ் சின்வரின் வீட்டை இஸ்ரேலிய விமானப்படை அதிரடியாக தாக்கி அழித்து உள்ளது.
இது பற்றி பேசிய இஸ்ரேலிய தரைப்படை அதிகாரி ப்ரிகேடியர் ஜெனரல். ஹிதாய் ஸில்பர்மேன் தற்போது யெகியேஹ் சின்வர் தற்போது பிற ஹமாஸ் தளபதிகளுடன் பதுங்கி இருப்பதாக கூறினார்.
யெகியேஹ் சின்வரின் வீடு தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் அமைந்துள்ளது, மேலும் சின்வரின் சகோதரர் வீடும் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.
அதை போல நேற்று ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய அரசியல் பிரிவு தலைவரான கலீல் அல் ஹாயேவின் வீட்டையும் இஸ்ரேலிய விமானப்படை தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.